×

அரியலூரில் சிமென்ட் ஆலையில் வெளியேறும் துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு

அரியலூர்,டிச.20: அரியலூர் சிமென்ட் ஆலையில் வெளியேறும் துகள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று சீனி.பாலகிருஷ்ணன் தெரிவிவித்தள்ளார். அரியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிமென்ட் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் துகள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் புகார் மனு அளித்தார். இதுகுறித்து அவர், தமிழக முதல்வர், சட்டப் பேரவை உறுப்பினர், கலெக்டர், ஆர்டிஓ, நகராட்சி ஆணையர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஆகியோருக்கு அளித்த மனுவில், அரியலூர் மாவட்டத்தில் 8 சிமென்ட் ஆலைகள், அதனைச் சார்ந்த சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள், கல் குவாரிகள் மற்றும் சக்கரை ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் துகள்களால் மாவட்டம் சுற்றுச் சூழல் மாசு அடைந்து வந்தது. மாவட்ட வளர்ச்சிக் குழு முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக அதன் தடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் மேற்கண்ட ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகைகள் மற்றும் துகள்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. சிலருக்கு நாள்பட்ட தொடர் தும்மல் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் புழுதி மையாக உள்ளது. மக்கள் நடமுடியாத நிலை உள்ளது. இதனால் மாவட்டம் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவது வேதனையாக உள்ளது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்ள்ளலாம் என்ற விவரம் அரியலூர் மாவட்ட ஆள் சேர்ப்புநிலைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரியலூரில் சிமென்ட் ஆலையில் வெளியேறும் துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Sini. Balakrishnan ,Dinakaran ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐல் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு